நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த SIR பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இதற்கான படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் இருந்தது.

இந்த நிலையில் தற்போது இதற்கான கால அவகாசத்தை தேர்தல் ஆணையம் நீடித்துள்ளது. அதன்படி டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 14ஆம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.