ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு, ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் குடும்பத்தினர் வான்கடே மைதானத்திலிருந்து வெளியேறும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில், மைதானத்தில் தனது குடும்பத்தினருடன் வைபவின் சகோதரரும் ராஜஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்து வந்திருந்தார். வைபவ் சூர்யவன்ஷியும் அவரது சகோதரர்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ‘அன்கேனி ரிசெம்பிளன்ஸ்’ ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Vaibhav Suryavanshi’s father was also present at the stadium to watch his son in action. A special moment for the family as he came to support and cheer for Vaibhav.#RRvsMI #VaibhavSooryavanshi pic.twitter.com/fQYP6SHfGL
— Faruk (@uf2151593) May 24, 2026
“>
இந்நிலையில் மூவரும் ஒரே மாதிரியான சிகை அலங்காரத்துடன் காணப்பட்டதால், “முழு குடும்பமும் ஒரே மாதிரியாக இருக்கிறது” என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வேடிக்கையாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். வைபவின் சகோதரர் உஜ்வல் சூர்யவன்ஷி, மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்ததும் வைரலாகி வருகிறது.
