தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைத் திரட்டியதைத் தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான அவரது ‘தி கோட்’ படத்தில் இடம்பெற்ற ஒரு கார் நம்பர் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்தப் படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் எண் ‘TN 07 CM 2026’ என்பதாகும்.

இதன் மூலம் 2026-ல் தமிழகத்தின் முதல்வராக விஜய் வருவார் என்பதை அவர் அன்றே சூசகமாகச் சொல்லியிருந்தாரா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் விவாதித்து வருகின்றனர்.

கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே வெளியான இந்தப் படத்தில், திட்டமிட்டே இந்த கார் நம்பர் வைக்கப்பட்டதாகப் பேச்சு எழுந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது விஜய் நிஜமாகவே முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதால் இது ஒரு “பெரிய கணிப்பு” என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

“>

 

சினிமாவையும் அரசியலையும் இணைக்கும் வகையில் அமைந்த இந்த தற்செயலான நிகழ்வு, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான மைல்கல்லாக மாறியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே தனது வெற்றியை விஜய் கணித்துவிட்டாரா என்ற கேள்வியுடன் இந்த வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.