நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.