தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பூத் சிலிப்’ அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம்.

ஆனால் அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். வாக்காளரின் வரிசை எண்ணை அறிய புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக நடப்பாண்டில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். இவை வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகம் செய்யப்படும்.