பாட்டி வீடு என்றாலே நம் நினைவுக்கு வருவது சுவையான உணவுகளும், எல்லையற்ற அன்பும்தான். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம்பெண் தனது பாட்டியின் (நானி) ஃபிரிட்ஜை நமக்காகச் சுற்றிக் காட்டுகிறார். அந்தக் கதவைத் திறந்தவுடனே பால், தயிர், காய்கறிகள் தாண்டி, விதவிதமான வீட்டுப் பலகாரங்கள், இனிப்புகள் மற்றும் எண்ணற்ற ஐஸ்கிரீம் வகைகள் என அந்த ஃபிரிட்ஜ் வழிந்து ஓடுகிறது. பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் இந்த வீடியோ, “பாட்டிகளின் அன்பு மொழி (Love Language) எப்போதும் சாப்பாடுதான்” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.



இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்களது பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பாட்டி வீட்டு ஃபிரிட்ஜ் என்றாலே இப்படித்தான் இருக்கும்”, “இதைப் பார்க்கும்போது என் பாட்டி வீட்டு நினைவுகள் வந்துவிட்டது” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக, கண்டெண்ட் கிரியேட்டர் விராஜ் கெலானி தனது பாட்டியிடம் ‘ரெஸ்டாரன்ட் ஸ்டைல்’ சாப்பாடு கேட்டபோது, அவர் அதே பருப்பு சாதத்தை ஒரு பூவை வைத்து அலங்கரித்து ‘ஃபைன் டைனிங்’ போலப் பரிமாறிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. பாட்டிகளின் கைமணத்திற்கும், அவர்கள் காட்டும் பாசத்திற்கும் ஈடு இணை ஏதுமில்லை