தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 17-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் நட்டி நட்ராஜ் மற்றும் ராதாரவி போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பகாசூரன் படத்தை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார். அதில் இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படம் பகாசூரன். இயக்குனர் மோகன் ஜி, நடிகர் செல்வராகவன் மற்றும் படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் சமூக அக்கறை கொண்ட அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் பகாசூரன் என்று பதிவிட்டுள்ளார்.