தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று (ஜன. 15) தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்; அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து ‘வெற்றிப் பொங்கல்’ என அவர் வாழ்த்துக் கூறியிருப்பது, த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், விஜய்யின் இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.