இந்தியாவில் பிரதமர் கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சில சத்தான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தியோதயா மற்றும் இதர முன்னுரிமை திட்ட ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 100 ரூபாயில் ரேஷன் கிட் வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ரேஷன் கிட்டில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா சனா பருப்பு, மாவு மற்றும் போகா வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் எந்தெந்த தேதியில் இருந்த இந்த ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.