தாராவி என்ற பகுதியை அதிக குடிசைகளைக் கொண்ட ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இங்கு ஒரு லட்சம் வீடுகளில் ஆறு லட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில் இங்குள்ள குடிசைகளை முழுவதும் அகற்றிவிட்டு அதை மும்பை நகரில் மற்ற பகுதிகளுக்கு இணையாக தரம் உயர்த்த 5069 கோடிக்கான தாராவி மறு சீரமைப்பு திட்ட டெண்டர் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகளுக்குப் பிறகு தாராவியில் குடிசை அமைத்து குடியேறியவர்களுக்கு மலிவு விலையில் வாடகை வீடுகளும் அதற்கு முன்பு குடியேறியவர்களுக்கு வீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராவி மறுசீரமைப்பு திட்டத்தில் தகுதியுடைய மற்றும் தகுதியற்ற குடிசை வாசிகளுக்கு வீடு வழங்கும் முதல் அரசு இது. மக்கள் வாழும் நிலையை பாருங்கள். தகுதியான குடிசை வாசிகள் மற்றும் தகுதியற்ற குடிசை வாசிகள் என அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும் என மகாராஷ்டிரா முதல்வர் தெரிவித்துள்ளார்.