பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பதான் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வரும் நிலையில் தற்போது புதிய வசூல் சாதனை தொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியீட்டு உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி உலக அளவில் 953 கோடி பதான் திரைப்படம் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 593 கோடி வசூலித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் பதில் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.