தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் – நடிகை அஜித் – ஷாலினி என்று மட்டுமல்லாமல் பிரபலமான ஜோடியாகவும் விளங்குகிறார்கள். சினிமாவில் ரியல் ஜோடியாக நடித்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறியது எப்படி என்ற தொகுப்பு அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தொகுப்பாக அமையும். தமிழ் சினிமா உலகில் சிறந்த காதல் ஜோடி யார் என்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித்-ஷாலினி என்று சொல்லப்படுகிறது.

பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து கேட்டு விவாகரத்து வாங்குவது நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு மத்தியில் அஜித்-ஷாலினி ஜோடி இன்னும் காதல் மாறாமல் அப்படியே வாழ்ந்து வருகின்றனர். அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். அப்போதுதான் இவர்களின் காதல் கதை ஆரம்பிக்க தொடங்கியது. அமர்க்களம் திரைப்படத்தில் ஷாலினி சொந்த குரலில் பாடல் என்ற பாடலை முதல் முதலில் பாடியிருந்தார்.

அந்த பாட்டு அஜித்துக்கு ரொம்ப பிடித்திடவே தொடர்ந்து ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது. அப்படபிடிப்பிற்காக ஊட்டிக்கு அஜித் சென்றிருக்கின்றார். அப்போது இருந்த சாலை வசதிகள் சாதாரணமாக 12 மணி நேரத்தில் தான் செல்ல முடியும். ஆனால் அஜித் 7 மணி நேரத்திலேயே சென்றுள்ளார். கிட்டத்தட்ட காரில் சென்ற 7 மணி நேரமும் ஷாலினி பாடிய சொந்த குரலில் பாடிய பாடலை கேட்டுக்கொண்டே பயணித்ததாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் ஷாலினிக்கு அடிபட்ட போது அஜீத் துடித்து போய் உள்ளார். அனைத்தையும் இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்பு நெருங்கி பழக ஆரம்பித்தார்கள் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் அஜித் நேராக சாலினியிடம் சென்று உன்னை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

அதற்கு பச்சை கொடி காட்ட 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு அனுஷ்கா என்ற மகளும் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மகனும் பிறந்தனர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனாலும் இந்த ஜோடி என்றைக்குமே சிறந்த ஜோடி தான் என்று தங்களின் கருத்துக்களை அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.