தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தை இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி விட்டதாகவும் மகிழ் திருமேனி கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது.
ஏகே 62 தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நடிகர் அஜித்தின் முழு சொத்து மதிப்பு 350 முதல் 400 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் அஜித்தின் வீடு அவர் பயன்படுத்தும் கார் மற்றும் பைக் போன்றவைகளில் விவரங்களும் வெளிவந்துள்ளது.



