தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அருண் விஜய். இவர் யானை படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயின் ஆக நடிக்கிறார்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் திடீரென அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் முட்டியில் பலத்த வலி ஏற்பட்டது. இதனால் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த அருண் விஜய் தற்போது குணமடைந்துள்ளார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.