பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க சித்தாரா என்டர்டெயின்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் தற்போது படக்குழு புதிய பாடலை வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் படிச்சா ஜெயிப்ப இல்லனா தவிப்ப என்ற வரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.