தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் சைரன், மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா மற்றும் தசரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். திரை உலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கலர்ஃபுல்லான உடையில் போட்டோ சூட் நடத்தி கீர்த்தி சுரேஷ் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் வெங்கி அட்லுரியின் திருமணத்தில் கலந்து கொண்ட போது கீர்த்தி சுரேஷ் அந்த ஆடையை அணிந்திருந்தார். அது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில் கீர்த்தி சுரேஷின் உடையை பலரும் கேலி செய்திருந்தனர். இந்நிலையில் தன்னை கேலி செய்த அதே உடையில் தற்போது கீர்த்தி சுரேஷ் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.