வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் தற்போது குரங்கிற்கு ஒருவர் சாப்பாடு ஊட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கையை இழந்த குரங்கு கம்பி மேல் அமர்ந்திருக்கிறது.
அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த குரங்குக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அந்த குரங்கும் அவர் கொடுத்த உணவை அன்போடு சாப்பிடுகிறது. அந்த வீடியோ காண்போரை நெகிழ வைத்துள்ளது. இணையத்தில் பலரும் அந்த நபரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
#JUSTIN அன்பே சிவம்❤️
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அடிவாரத்தில் ஒரு கை துண்டிக்கப்பட்ட
குரங்கிற்கு உணவு ஊட்டிவிட்ட நபர்#Sathuragiri #Temple #Monkey #Humanity #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/1c7VnQsCIE— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 20, 2025
