நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம், திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கமல் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மக்கள் நீதி மையம் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களில் ம.நீ.ம வேட்பாளர்கள் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.