தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிக முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மக்களிடத்தில் இந்த முறை மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த மாற்றம் வெளியில் தெரியாமல் மிகவும் அமைதியான முறையில் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்குகளாகப் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்குச் சாதகமாக இருந்தாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இந்தத் தேர்தலில் அதிமுக-என்டிஏ கூட்டணியே பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஆளும் கட்சியான திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் உறுதியாகக் கணித்துள்ளார். மக்கள் அமைதியாக இருந்து அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால், நாளை வெளியாகும் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜியின் இந்த ‘சைலன்ட் ஓட்ஸ்’ (Silent Votes) குறித்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
