நடிகர் அஸ்வின் குமார் ஒரு ஒரு மேடையில் “40 கதைகளைக் கேட்டபோது தூங்கிவிட்டேன்” என்று கூறிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரின் இந்த கருத்தை வைத்து ட்ரோல் செய்து வந்தனர். இது தொடர்பாக அவரிடம், “அந்தக் கிண்டல்களால் எத்தனை நாட்கள் நீங்கள் மன அழுத்தத்தில் (Depression) இருந்தீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட காயம் இன்றும் இருக்கிறது, அது இன்னும் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
#Ashwin about the trolls he faced because of saying he slept during 40 story narrations
Q: For how many days you were in depression?
Ashwin: The wound is there & still haunts me. Sometimes I feel whether there is Humanity 👀Nee pesuna pechu apdi bro 👍🏽pic.twitter.com/onrWgo2LIC
— VCD (@VCDtweets) December 26, 2025
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் தன்னைத் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்ததை எண்ணி வருந்தினார். “சில நேரங்களில் இந்த உலகில் இன்னும் மனிதநேயம் இருக்கிறதா? என்ற சந்தேகம் கூட எனக்குள் எழுகிறது” என்று தனது மனக்காயங்களை வெளிப்படுத்தினார். விளையாட்டுத்தனமாகச் சொன்ன ஒரு கருத்து, ஒரு மனிதனை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதற்கு அஸ்வினின் இந்த உருக்கமான பதில் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. இக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
