மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் மைதானத்தில், நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்த இந்த விழாவிற்கு, நடிகர் விஜய் கோட் சூட் அணிந்து கம்பீரமாக வருகை தந்தார். அவர் மேடையில் ‘ரேம்ப் வாக்’ சென்றபோது, அங்கிருந்த ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
In JN 🎚️ Audio Launch ❤️💛❤️
TVK🇪🇦 Brand Aagi Romba Naal Aachu Thalaiva @TVKVijayHQ💐#JanaNayaganAudioLanuch pic.twitter.com/nYH4WV163U— Thalapathy 𝐒𝐡𝐚𝐝𝐨𝐰👥 (@ThalapathyShade) December 27, 2025
நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் பலரும் ‘டிவிகே, டிவிகே’ என விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயரை முழக்கமிட்டனர். இதைக் கவனித்த விஜய், மேடையிலிருந்தே ரசிகர்களை நோக்கி ‘இங்கு அரசியல் கோஷம் வேண்டாம்’ என்பது போல மிக மென்மையாக சைகை காட்டினார். சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் அவர் செய்த இந்தச் செயல் மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
