கேரளாவில் நடந்து வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கேரளாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது “வைக்கம் போராட்டம் நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம் ஆகும்.
தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்தியது இவ்வூர். வெற்றி பெருமிதத்தோடு இந்த மண்ணில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறேன். தமிழ்நாடு-வைக்கம் தலைவர்கள் சேர்ந்து போராடிய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை நாம் கொண்டாடி வருகிறோம். தமிழ்நாட்டில் கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது இப்போராட்டம்” என்று பேசினார்.