நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதன் பிறகு கடந்த மாதம் 27 ஆம் தேதி அவருடைய முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் 8 லட்சம் பேர் கலந்து கொண்டனர். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட முதல் மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. நடிகர் விஜய் தன்னுடைய முதல் மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் எதிரி போன்ற பல்வேறு விஷயங்களை அறிவித்தார். குறிப்பாக திமுகவின் நேரடியாகவே அரசியல் எதிரி என்று கூறிய அவர் செயற்குழு கூட்டத்தில் கூட திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்.
இந்நிலையில் திமுக கட்சியின் எம்பி கனிமொழி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு எம்பி கனிமொழி விஜய் மிகப் பெரிய ஒரு திரைப்பட ஆளுமை. அவரைப் பார்ப்பதற்காக கண்டிப்பாக கூட்டம் வரும். ஆனால் இது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்டால் அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார். மேலும் விஜய் மிகப் பெரிய திரைப்பட ஆளுமை என்றும் ஒரு நடிகருக்காக இந்த கூட்டம் கூடியது என்று கூற முடியாது எனவும் அவரை புகழ்ந்து கனிமொழி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
— Tamizhaga Vetri Kazhagam News (@TVKNewsUpdates) November 22, 2024
