பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1976-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கப்பட்ட ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை, 2019-இல் ஜம்மு காஷ்மீரின் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட பதற்றம் காரணமாக பாகிஸ்தானால் முழுமையாக நிறுத்தப்பட்டது.
இதனால் இந்திய ரயில்வேயின் 11-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் வாகா எல்லை ரயில் நிலையங்களில் மாட்டிக்கொண்டன. தற்போது பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்த ரயிலை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் துருப்பிடித்த நிலையிலும், இந்திய ரயில்வேயின் முத்திரையுடனும் இருக்கும் அந்தப் பழைய ரயில் பெட்டிகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
पाकिस्तान में खड़ी भारतीय रेलवे की ट्रेन का बंदे ने बनाया वीडियो, लोग बोले- रख लो, हमारे पास अब वंदे भारत है! https://t.co/SvZ70kZa20
“>
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த இந்திய நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, “அந்தப் பழைய ரயிலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், எங்களிடம் இப்போது அதிநவீன ‘வந்தே பாரத்’ ரயில்கள் உள்ளன” என்று பலரும் பாகிஸ்தானை கிண்டல் செய்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மேலும் சிலர், இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த ரயிலை திரும்பக் கேட்காமல் அப்படியே விட்டுவிடலாம் என்றும், பாகிஸ்தான் தனது தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு இதை விற்று பணமாக்கிக் கொள்ளட்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
