சமூக வலைதளங்களில் தினந்தோறும் வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம், ஆனால் தற்போது பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. அங்குள்ள பூங்கா ஒன்றில் பெண் செய்தியாளர் ஒருவர் பொதுமக்களிடம் நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு வாலிபரிடம் “உங்களுக்கு காதலி இருக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த வாலிபர் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு, “எனது காதலி இரண்டு வாரங்களுக்கு முன்புதான் மாரடைப்பால் இறந்துவிட்டார்” என்று கூற, அங்கிருந்த சூழலே சோகமாக மாறியது. ஆனால், அடுத்த வினாடியே செய்தியாளர் காதலியின் பெயரைக் கேட்க, அந்த வாலிபர் வானத்தைப் பார்த்தபடி “அவர் பெயர் மறந்துவிட்டது” என்று கூறவே செய்தியாளர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
View this post on Instagram
“காதலி பெயரே தெரியாமல் இது என்னப்பா காதல்?” என்று செய்தியாளர் கேட்க, “அந்தத் துக்கத்தில்தான் பெயர் மறந்துவிட்டது” என அந்த வாலிபர் அசால்ட்டாக பதில் அளித்தார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த செய்தியாளர், “அவ்வளவு துக்கம் இருந்தால் இங்கே ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்க, “வேற புதுசா யாரையாவது காதலிக்கலாம்னு தான் வந்திருக்கேன்” என்று அவர் அளித்த பதில் அங்கிருந்தோரை அதிர வைத்தது. தற்போது இந்த வீடியோ, இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
