ஈரானின் இஸ்பஹான் நகரில் அமைந்துள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1,000 கிலோ எடை கொண்ட ராட்சத ‘பங்கர் பஸ்டர்’ ரக குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் நிலத்தடியில் ஆழமாக அமைந்துள்ள ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் திறன் கொண்ட இந்த குண்டுகள் விழுந்தபோது ஏற்பட்ட பயங்கர அதிர்வுகள் மற்றும் தீப்பிழம்புகள் அந்தப் பகுதியையே நிலைகுலையச் செய்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
WATCH: Massive explosions in Isfahan, Iran following U.S.-Israeli airstrikes. pic.twitter.com/XAeT4tquyt
— AZ Intel (@AZ_Intel_) March 30, 2026
“>
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ஈரானின் தற்காப்பு அரண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் மோதல் போக்கு, இந்தத் தாக்குதலின் மூலம் போராக மாறுமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பிராந்தியத்தில், இத்தகைய அதிநவீன மற்றும் பேரழிவு தரும் ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.
