ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கும் மலகப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹோட்டல் தொழிலாளியான சதீஷ்(22) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகி காதலிக்க ஆரம்பித்தனர். சதீஷ் சிறுமியை பார்ப்பதற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் பள்ளி சென்று கொண்டிருந்த சிறுமியை நைசாக பேசி திருப்பதியில் இருக்கும் ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தைகள் கூறி நான்கு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதற்கிடையே சிறுமியை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். நேற்று முன்தினம் போலீசார் லாட்ஜில் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்தனர்.