உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில் பள்ளி இ-ரிக்ஷா ஓட்டுநரின் கவனக்குறைவால் பெரும் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.

பள்ளி  மாணவர்கள் இ-ரிக்ஷாவில் ஏறிக்கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் ஆக்ஸிலரேட்டரை (Accelerator) வேகமாகத் முறுக்கியுள்ளான். இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென முன்னோக்கிப் பாய்ந்தது.

“>

 

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுநர், ஓடும் வாகனத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அதன் பின்னால் ஓடினார். ஓட்டுநரின் இந்த அலட்சியமான செயல் மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.