திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகர் அந்தோணியார் தெருவில் அருண்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புனித பியூலா(18) என்பவரை அருண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஏழு மாத ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக தினமும் அருண் தனது மனைவிக்கு இரவு நேரம் நூடுல்ஸ் ப்ரைட் ரைஸ் போன்ற பாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பியூலாவை குடும்பத்தினர் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த போது பியூலா கோமநிலைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் தொடர்ந்து பாஸ்ட் ஃபுட் உணவு சாப்பிட்டதால் கல்லீரல் முழுவதும் பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் பியூலாவை காப்பாற்ற இயலவில்லை. சிகிச்சை பலனின்றி நேற்று பியூலா உயிரிழந்தார். இந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
