ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள ஒரு  மருத்துவமனையின் வார்டுக்குள் நுழைந்த நபர், அங்குத் தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகளிடமிருந்து செல்போன்களைத் திருடிச் சென்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கருப்பு நிற ஹூடி மற்றும் வெள்ளை பேன்ட் அணிந்திருந்த ஒரு நபர், தூங்கிக்கொண்டிருந்த நோயாளிகளின் படுக்கைகளுக்கு இடையே அமைதியாக நகர்ந்து அவர்களின் அருகில் வைக்கப்பட்டிருந்த மொபைல் போன்களை எடுத்துச் செல்வது அந்தக் காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

“>

 

பல நோயாளிகள் காலையில் எழுந்து பார்த்தபோது தங்கள் செல்போன்கள் திருடு போயிருந்ததைக் கண்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை தொடங்கி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், நள்ளிரவில் திருடன் எவ்வாறு கவனிக்கப்படாமல் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து வெளியேறினார் என்பது குறித்து நெட்டிசன்கள் பாதுகாப்புக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளனர்.