டெல்லியின் செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு முகமை (NIA) விசாரித்து வரும் நிலையில், இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதுடன், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த புதிய சி.சி.டி.வி. காட்சி ஒன்று வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 11 விநாடிகளே ஓடும் அந்தக் காணொளியில், சிக்னலுக்காக வாகனங்கள் நின்றிருக்கும்போது குண்டு வெடிப்புக்குள்ளான காரும் நிற்பதைக் காண முடிகிறது.

“>

 

சில வினாடிகளுக்குப் பிறகு வாகனங்கள் நகரத் தொடங்கியதும், கார் பயங்கரமாக வெடித்துச் சிதறும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்துத் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.