மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 4 வயது சிறுமி மீது ஒரு கட்டிடத்தின் மேலிருந்து நாய் விழுந்ததில் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை மும்பையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மும்பிரா பகுதியில் நடந்துள்ளது.
சிறுமி தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5-வது மாடியிலிருந்து ஒரு நாய் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் இறந்துள்ளார். இந்த சம்பவம் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நாய் எப்படி விழுந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தனது மகளின் மரணத்தில் தவறான செயல் இருப்பதாக சந்தேகிக்கவில்லை என்று சிறுமியின் தாய் போலீஸிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாயின் உரிமையாளருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#Thane: A dog fell on a 3-year-old girl from the 5th floor, the girl died, the entire incident in Mumbra was captured on CCTV.
The dog is a Golden Retriever, the dog is also injured.#Mumbai #Doglover #Maharashtra #Viral #Viralvideo #goldenretriever pic.twitter.com/YvKd0jBwLc
— Siraj Noorani (@sirajnoorani) August 7, 2024
“>
