ஜப்பானின் ஹோன்ஷூ மாகாணத்தில் அமைந்துள்ள புஜி மலை, அந்நாட்டின் மிக உயரமானதும், பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது.
தூங்கிக்கொண்டிருக்கும் எரிமலையாகக் கருதப்படும் புஜி, அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால், எரிமலை வெடிப்பால் ஏற்படும் அபாயங்களை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஜப்பான் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புஜி எரிமலை வெடித்தால் ஏற்படும் பாதிப்புகளை சித்தரிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றை ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.
அதில், எரிமலை வெடிப்பால் மக்கள் சந்திக்கும் அவலங்கள், நோய் பரவல்கள், உயிரிழப்புகள் உள்ளிட்ட சிக்கல்களும், அதிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களும் இடம்பெற்றுள்ளன. தற்போது அந்த வீடியோ ஜப்பான் மட்டுமின்றி உலக நாடுகளிலும் வைரலாகி, பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
🌋 Tokyo releases AI-generated video of Mount Fuji erupting..
It is all part of an artificial intelligence-generated video the Tokyo Metropolitan Government released last week to raise awareness of what could happen to the capital if Mount Fuji erupted. 🌋 pic.twitter.com/PFKKT2Rcu4
— Global𝕏 (@GlobaltrekX) August 26, 2025
“>
