ஈரோட்டில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அதிமமுக) கொடி அறிமுக விழா சிறப்பாக  நடைபெற்றது. தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அறிவித்தார். மேலும், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் முழு மூச்சுடன் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்தார்.