தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஸ் கோயில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கூட்டணி தொடர்பாகவும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு வந்ததாக கூறப்பட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமியுடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஒரு பட்டியலை பியூஸ் கோயலிடம் கொடுத்துள்ளார். அதன்படி பாஜகவுக்கு 23 சீட்டு பாமகவுக்கு 23 சீட்டு மற்ற கட்சிகளுக்கு 18 சீட்டுகள் ஒதுக்கீடு செய்து லிஸ்ட் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அதிமுகவுக்கு 170 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிகவிடம் தாங்களே பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வதாக எடப்பாடி பழனிச்சாமி அவரிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இந்த விவரங்கள் முறையாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் பாமக இன்னும் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிக்காத நிலையில் தற்போது அவர்களுக்கும் சேர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்துள்ளதால் கிட்டத்தட்ட அவர்கள் கூட்டணியில் இணைவது உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
