மதுரையில் சமீபத்தில் அதிமுக மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த மாநாட்டின் போது தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட உணவு சரியாக இல்லாததால் ஏராளமான உணவுகள் வீணாக்கப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளது, அந்த மாநாட்டை ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ இளங்கோவன் விமர்சித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றும் பாதையாத்திரை போகவில்லை வாகன யாத்திரை தான் சென்றிருக்கிறார் என விமர்சித்த அவர், நடிகர் ரஜினி யோகி காலில் விழுந்தது மனதுக்கு வருத்தமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.