நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 8 முதல் 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கும் என்றும் தெரிகிறது. ஏற்கனவே அதிமுக தரப்பில் இருந்து சிவி சண்முகம், ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அன்புமணியின் விருப்பத்திற்கு ஏற்ப பாமக பாஜகவுடன் இணைவதாக கூறப்படுகிறது.