எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக ஆனது தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு தொடர் தோல்விகளால் அதிமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து வருகிறது.

திருத்தப்பட்ட விதிகள் தொண்டர்களின் ஜனநாயகத்திற்கு எதிராக உள்ளது என கோரி அதிமுக கட்சியின் உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்