விஜய் தனது உரையில் பாஜக-வை நேரடியாக விமர்சிக்காதது குறித்துப் பேசிய அருண்ராஜ், “தேர்தல் களத்தில் தற்போது இருக்கும் கட்சிகளைப் பற்றி மட்டுமே தலைவர் பேசினார். இல்லாதவர்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை” என்று கூறியதோடு, மிக முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் தற்போது எந்த வரவேற்பும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், வரும் தேர்தலில் உண்மையான போட்டி என்பது ஆளும் திமுக-விற்கும், தவெக-விற்கும் இடையே மட்டுமே என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

​இதன் மூலம், கடந்த சில நாட்களாக அதிமுக – தவெக இடையே நிலவி வந்த கூட்டணிப் பேச்சுகளுக்கு அருண்ராஜ் தனது பேட்டியின் வாயிலாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “அதிமுக பக்கம் போக வேண்டிய அவசியமே தவெக-வுக்கு இல்லை” என்று அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்ததை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பேச்சு அமைந்துள்ளது. தவெக தனித்துப் போட்டியிடும் அல்லது திமுக-வை எதிர்க்கும் ஒரு வலுவான கூட்டணியைத் தலைமை தாங்கும் என்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.