அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அந்தக் கூட்டத்தில் சமீப காலமாக தவெக கொடியுடன் சிலர் வருவது பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது கரூர் சம்பவத்தை விஜய்க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்தார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொடியோடு வருவதாக கூறப்பட்டது.

அதோடு எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றுதமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வைக்கப்படும் பேனர்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி கொடி பறக்குது பாருங்க. பிள்ளையார் சுழி போட்டாச்சு என தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தியவாறு கூறினார். அதே நேரத்தில் கொடி பிடித்தவர்கள் அதிமுக டீசர்ட் அணிந்திருந்ததால் அதிமுக கட்சியினரே தமிழக வெற்றிக் கழகத்தினரின் கொடியை பிடித்ததாக கூறப்பட்டது. டிடிவி தினகரன் கூட விஜயுடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடியை பிடித்ததாக விமர்சித்திருந்தார்.

இதற்கு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் கொடுத்தார். இது பற்றி அவர் கூறியதாவது, அதிமுக காரர்எங்க கட்சி கொடியவே தூக்க மாட்டாங்க. இதுல அடுத்த கட்சியின் கொடியை பிடித்து ஆட்டுவோமா. அதிமுக தொண்டர்கள் மாற்றுக் கட்சியின் கொடியை பிடித்ததாக வரலாறு கிடையாது. தவெக கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவிற்கு அதிமுகவினர் ஒன்னும் இழி பிறவிகள் கிடையாது என்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி விஜய் உடன் கூட்டணி வைக்க வியூகம் அமைத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.