அதிமுகவில் இருந்து புறக்கணிக்கப்பட்ட நிலையில், கட்சியின் ஒற்றுமைக்கு புதிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அரசியல் வட்டாரங்களில் முக்கிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறிக்கையில், “உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்மொழிந்தவராக சிபி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்திய மக்களின் பெருமை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்திய தேசத்தை உயரத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். இதயதெய்வம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆசிகளுடன், தமிழ்தேசத்தின் பெருமையை உயர்த்தும் தலைவராக அவர் திகழ்வார் என வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்தார். இந்த அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இல்லாமல் வெளியானது அரசியல் வட்டாரங்களில் புதிய பரிசீலனையை கிளப்பியுள்ளது.