தவெக தலைவர் விஜய், திருச்சியில் செப்டம்பர் 13ஆம் தேதி மக்களுடன் நேரடியாக சந்தித்து பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்தார்.

ஆரம்பத்தில், முக்கியமான பகுதியாகக் கருதப்படும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே பரப்புரை நடத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி போலீசார் அனுமதி வழங்க மறுத்தனர். இதனால், பச்சைக் கொடி காட்டிய இடத்தில் பரப்புரை நடத்த முடியாத நிலை உருவாகியது.

இதனைத் தொடர்ந்து, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து பரப்புரை திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, திருச்சி TVS டோல்கேட் பகுதியில் விஜய் தனது பரப்புரையை தொடங்கி, மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே பெரிய திரளான மக்களிடம் உரையாற்றுவார். அதன் பிறகு, காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை எட்டிய பிறகு, அரியலூர் நோக்கி பயணிக்கிறார். பொதுமக்கள் அதிகமாக திரலும்  நிலையில், பரப்புரை அமைதியாக நடைபெற வேண்டுமென காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.