தங்கம் விலை கடுமையாக உயர்ந்துஉள்ளதால், திருமணம் நடத்தும் வயதில் பெண்களை வைத்திருக்கும் ஏழை மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த தகவலை உளவு துறை வாயிலாக பெற்றுள்ள அரசு, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த பரிசீலித்து வருகிறது.

அதாவது தமிழ்நாடு அரசு நடத்தும் 4 திருமண உதவித் திட்டங்களுக்கு ரூ.45 கோடி மதிப்பில் 5,460 தங்க நாணயங்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டர் (ஓப்பன் டெண்டர் முறையில் கொள்முதல்) அறிவிக்கப்பட்டுள்ளது. தங்க நாணயங்கள் 22 காரட்டில் 8 கிலோ கிராம் எடையுடன் இருக்கும். இந்த நாணயங்கள் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையுடன் கொடுக்கப்படும்.