அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்பது தேர்தல் நோக்கத்தில் வைப்பது தான். ஆனால் கட்சியின் கொள்கை என்பது நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. நாங்கள்தான் ஒரிஜினல் A டீம். பாஜக அமைச்சரவையில் இருந்தபோதே கருத்து வேறுபாடு ஏற்பட அதனை தூக்கி எறிந்த கட்சி அதிமுக என்று கூறியுள்ளார்.