மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது இசக்கி சுப்பையாவும் தனது எம்.எல்.ஏ பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அதிமுகவின் மொத்த எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 43 ஆகச் சரிவடைந்துள்ளது. அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பதவிகளைத் துறந்து வருவது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய விவாதப் புள்ளியாக மாறியுள்ளது.
இந்த அடுத்தடுத்த அதிரடி சரிவுகளுக்குப் பின், தற்போது வரை அதிமுக உட்கட்சிப் பூசலில் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தரப்புக்கு வெறும் 27 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில், சி.வி.சண்முகம் தரப்புக்கு 16 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக யாருடைய கட்டுப்பாட்டில் செல்லப்போகிறது என்ற உச்சக்கட்ட அதிகார மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
