திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்களை நாங்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம் என்று பச்சை பொய் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.

மேலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? விடியல் பயணம் நீங்கள் போட்ட திட்டமா? காலை சிற்றுண்டி திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? நான் முதல்வன் திட்டம் அதிமுக திட்டமா? இல்லம் தேடி கல்வித் திட்டம் யார் திட்டம்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அதிமுகவை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.