டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் DGPயாக பணியாற்றி கடந்த மே மாதத்திற்கு பிறகு ஓய்வு பெற்றிருந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. அதற்கான கோப்புகள் எல்லாம் தமிழக அரசு ஆளுநர் ஆ.என் ரவிக்கு அனுப்பி இருந்தது. ஆனால் ஆளுநர் அதனை ஏற்க மறுத்து இருந்தார்.

டிஎன்பிஎஸ்சி  தலைவராக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொன்னால் பத்திரிகைகளிலே முதலில் வெளிப்படையாக விளம்பரம் கொடுக்க வேண்டும். அதிலே எத்தனை பேர் விண்ணப்பித்திருந்தார்கள் ? யார் யாரை நாங்கள் நிராகரித்தோம் ? என்ன காரணத்திற்காக இவரை தேர்வு செய்திருக்கிறோம் என்பதை ஆளுநருக்கு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் இது எதையுமே குறிப்பிடாமல் வெளிப்படையாக இவரை தேர்வு செய்யாமல்  பொதுவாக தேர்வு செய்திருப்பது போல தெரிகின்றது. எனவே இதனை ஏற்க முடியாது. அது மட்டும் அல்லாமல் இன்னும் சில முக்கியமான கோப்புகள் விவரங்கள் தவறவிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு தமிழக அரசுக்கு கோப்புகளை திருப்பி அனுப்பி இருந்தார்.

தமிழக அரசு  ஆளுநர் சுட்டி காட்டிய காரணங்களை எல்லாம் சரி செய்து,  மீண்டும் அனுப்பிருந்த நிலையில்,  இரண்டாவது முறையாக தற்போது ஆளுநர் அந்த கோப்பை திருப்பி அனுப்பி இருக்கின்றார். அதில் அவர்  முக்கியமான மூன்று விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். தற்போது சைலேந்திரபாபு அவர்களுக்கு 61 வயது 6 மாதங்கள் ஆகிறது.

டிஎன்பிஎஸ்சி தலைவர் பொறுப்பு பதவியை பொருத்தவரை 62 வயது மட்டும் இருக்க முடியும். எனவே இன்னும் ஆறு மாத காலம் மட்டுமே அவரால் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்ற சூழ்நிலையில் வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கவில்லை என்றும் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். எனவே வெளிப்படை தன்மையோடு மற்றொரு நபரை டிஎன்பிஎஸ்சி  தலைவராக தேர்வு செய்து,  அதற்கான கோப்புகளை அனுப்ப வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்திருக்கின்றார். அது மட்டுமல்லாமல் பத்திரிகைகள் விளம்பரம் கொடுப்பது,   வெளிப்படை தன்மையோடு அதை  கடைபிடிக்க வேண்டும் என்றும்  ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.