தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க கோரி தமிழக அரசு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்  ரவி நிராகரித்திருந்தார். மேலும் தமிழக அரசுக்கு கோப்புகளை திருப்பி அனுப்பிய  ஆர்.என் ரவி  டிஎன்பிஎஸ்சி தலைவர் பணியிடங்களுக்கு வெளிப்படைத்தன்மையோடு தேர்வு செய்யவில்லை, பொத்தாம்பொதுவாக தேர்வு செய்து உள்ளீர்கள் என்ற பல்வேறு காரணங்களை குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் சுட்டிக்காட்டிய காரணங்களுக்கெல்லாம் பதில் அளித்து மீண்டும் இரண்டாவது முறையாக கோப்புகளை ராஜ்பவனுக்கு அனுப்பி இருந்த நிலையில்,  இன்று அதனை மீண்டும் ஆளுநர் ஆர்.என் ரவி இரண்டாவது முறையாக  நிராகரித்துள்ளார். அதில் டிஎன்பிஎஸ்சி தலைவருக்கான பொறுப்புக்கு வருபருக்குபத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

அதன்படி தமிழக அரசு தேர்வு செய்த பரிந்துரையை அனுப்ப வேண்டும். அதேபோல் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் 62 வயது வரை மட்டுமே இருக்க முடியும். சைலேந்திரபாபு 61 வயது ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எனவே ஆறு மாதங்கள் மட்டும் அவர் பதவியில் இருப்பார் எனவே வேறு   ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.