கோவையில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாக இருந்தவரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான சொக்கம்புதூர் செந்தில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி இன்று (அக். 30) தி.மு.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க.வின் முன்னாள் கோவை மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகப் பதவி வகித்தவர் செந்தில். இவருடன், அவரது ஆதரவாளர்கள் சிலரும் தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களை, கோவையில் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் வரவேற்றார்.
மாநிலம் முன்னேற, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் தலைமையே தேவை என்றுணர்ந்து, அதிமுக முன்னாள் கோவை மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சொக்கம்புதூர் திரு. செந்தில் அவர்கள், இன்று தன்னை கழகத்தில்… pic.twitter.com/zMY5Q9cEWw
— V.Senthilbalaji – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) October 30, 2025
“>
அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் தி.மு.க. தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களைத் தி.மு.க.வில் சேர்க்கும் படலம் தொடர்ந்து வருகிறது.
சொக்கம்புதூர் செந்தில் போன்ற முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்திருப்பது, 2026 தேர்தலை எதிர்கொள்ளும் தி.மு.க.வின் வியூகத்திற்கு பலத்தைச் சேர்க்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
