பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்வையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் இன்று (அக். 30) சசிகலாவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, “அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் சுமூகமாகத் தீர்க்கப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “அக்கட்சியில் சர்ப்ரைஸ்ஆக அனைத்தும் நடந்து முடியும்” என்று அவர் சூசகமாகப் பதில் அளித்தார். சசிகலாவின் இந்த கருத்து, அ.தி.மு.க.வில் உள்ள பிளவு விரைவில் முடிவுக்கு வந்து, எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறலாம் என்ற எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
